இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வடு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை தான். இது பற்றி அனைவரும் அறிந்திருப்போம். 1919 ஆம் ஆண்டில் ரவுலட் என்று அடக்குமுறைச் சட்டத்தை ஆங்கிலேய அரசு பிறப்பித்தது. அதன் மூலமாக யாரை வேண்டுமானாலும் காரணம் இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனைப் போலவே பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]
