சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்தான், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக கூடும் கூட்டம் ஆகும். அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கில் நடைபெறும் முதல் கூட்டமும் இதுதான் என்று கூறப்படுகிறது.
