கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 17 வயது மாணவி மர்மமாக இறந்து கிடந்தார்.. இது தற்கொலையல்ல, கொலை தான் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிகேட்டு பள்ளியில் 4 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி செயலாளர் சாந்தி, தாளாளர் ரவிக்குமார், […]
