ஜாமீனில் வெளியே வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சொத்து தகராறில் தன்னுடைய மகன் அலெக்ஸாண்டரை கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். […]
