ஒலிம்பிக் போட்டியானது இந்த ஆண்டு திட்டமிட்டபடி, கட்டாயம் நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகின்றது. இதனால் இந்த ஆண்டு […]
