பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]
