Categories
உலக செய்திகள்

“இனியாவது எல்லாரும் தடுப்பூசி போடுங்க”…. திக்கி திணறும் பிரபல நாடு…. வேண்டுகோள் விடுத்த பிரதமர்….!!

கனடாவில் கொரோனாவின் 5 ஆவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனா மீண்டும் மீண்டும் உரு மாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் அனைவரிடத்திலும் இது தொடர்பாக பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்த கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் 40 ஆயிரம் அகதிகளுக்கு இடம் கொடுப்போம்..! டுவிட்டரில் பதிவிட்ட கனடா பிரதமர்… வெளியான முக்கிய தகவல்..!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாடு 40 ஆயிரம் அகதிகளை வரவேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஜி-20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உட்பட பலரது மனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகளாவிய சமூகம் உறுதியாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் மனிதாபிமான உதவிகள் ஆப்கானியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம். அதேபோல் சுமார் 40 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

தூக்கி எறிஞ்சிருக்காங்க…. “தலிபான்களை நாங்கள் ஏற்கமாட்டோம்”… கனடா பிரதமர் அதிரடி..!!

தலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அரசாக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயத்துடன் உள்ள நிலையில் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன.. தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுவதால் அந்த அரசை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன.. இதற்கிடையே தலிபான்கள் நாங்கள் எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை.. எனவே சர்வதேச அளவில் அனைவரும் எங்களை அங்கீகரிக்கவேண்டும்  என்று தலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதே நேரத்தில் ஆப்கான் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சவகாசமே வேண்டாம்…! ஓங்கி வலுத்த கோரிக்கை… மவுனம் கலைத்த கனடா பிரதமர் …!!

பிரிட்டன் உடனான  உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி ஓப்ராவுடனான நேர்காணலில் தான் அரச குடும்பத்திற்கு வந்த பிறகு மௌனமாக்கபட்டதாகவும் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை தொடர்ந்து  பிரிட்டன் அரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும என்று கனடாவில் கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  பிரிட்டன் உடனான உறவை முறித்துக் […]

Categories
உலக செய்திகள்

கொலை முயற்சி?… பிரதமர் வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்து சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா பிரதமரை கொலை செய்ய முயற்சித்தே அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று கனடா பிரதமர் வீட்டின் காம்பவுண்ட் கதவை Hurren என்பவர் தனது டிராக் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமர் ஜஸ்டினின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக அச்சமயம் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். கனடிய பத்திரிகைகள் சில நீதிமன்றத்தில் இது […]

Categories
உலக செய்திகள்

எல்லாருக்கும் ரூ. 1,35,963 சம்பளம்…! பிரதமர் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி ….!!

கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி!

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்கு கொரோனா… வீட்டிலிருந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்த கனடா பிரதமர்!

தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், […]

Categories

Tech |