சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.5 1/2 லட்சம் ஜவுளிக்கடையில் மோசடி செய்த மேலாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனியில் வடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடை ஒன்றை காரைக்குடி 100 அடி சாலையில் ஆரம்பித்தார். அதற்கு மேட்டுக்கடை பகுதியில் வசித்து வரும் செல்வகணபதி என்பவரை செயலாளராக நியமித்தார். […]
