ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்று கூறினார். கடந்த 2013ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான […]
