இந்தியா மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டம், அனைத்து ஊரக வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கம் அனைத்து ஊரக வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது தான். அந்த வகையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
