Categories
தேசிய செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம் …காஷ்மீர் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் புதன்கிழமை (மே6) நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை தாக்குதல் நீடித்துள்ளது. இது குறித்து  பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதிகளான ரஜோரி மாவட்டத்திலுள்ள மஞ்சகோட்டே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. மேலும்  பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட்டே செக்டார் பகுதியிலும் […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்: முதல்வர் இரங்கல்..!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 3 பேரில் தமிழகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அரங்கேறும் பயங்கரவாதம் குறித்து பத்திரிகையாளர் ட்வீட்: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது காவல்துறை!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகத்தில் ஆட்சேபிக்கத்தக்க பதிவுகளை பதிவிட்டது தொடர்பாக மற்றொரு பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் கிலானி மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் யுஏபிஏ- வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பதிவில் “glorifying terrorism in Kashmir Valley” என்று பதிவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய ஆப்ரேசன் மெலஹுரா: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பதுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 பேர் பரிதாபமாக பலி..!

ஜம்மு காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தின் ரங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 14 பேர், கர்நாடகாவில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 14 பேர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

உலகமே கொரோனா பிடியில் இருக்கும்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்…பதிலடி கொடுத்த ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது… துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: இதுவரை 43 பேர் பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறியதாவது, நோய் தொற்று பாதித்துள்ள 4 பேரில் இருவர் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் இருவர் ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். 4 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், கொரோனா நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில அரசாங்கம் தகவல்

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காஷ்மீரில் வரும் 31ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை..!

கொரானா வைரஸ்  பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் வரும் 31ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸுக்கான தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-ல் இருந்து 3,300ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,552-ல் இருந்து 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING ; இந்திய ராணுவம் பதிலடி – ஒரு பாக். ராணுவ வீரர் பலி

ஜம்மு – காஷ்மீர் குப்வாராவில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இறந்துள்ளார். நீலம் பள்ளத்தாக்கு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க இந்திய நிலைகளை பாகிஸ்தான் தாக்குவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் இந்த பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இராணுவ வீரரா..? டிரக் டிரைவரை கொன்ற பிரிவினைவாத கும்பல்…!!

காஷ்மீரில் இராணுவ வீரர்கள் என்று டிரக் டிரைவரை  போராட்டகாரர்கள் கல் எறிந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகின்றது. தொடர்ந்து அங்கே இராணு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு_வில் சில இடங்களில்  இயல்பு நிலை திரும்பினாலும்  அங்கே கல்வீச்சு சம்பவமும் , போராட்டமும் , வன்முறையும் நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில், நேற்று இரவு  அங்குள்ள தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் […]

Categories

Tech |