நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதையடுத்து கார்த்தி ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு “ஜப்பான்” என பெயரிட்டுள்ளனர். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதன்முறையாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றிபெற்ற நடிகர் சுனில் முக்கியமனா வேடத்தில் நடிக்கிறார். அதன்பின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனும் ஒரு […]
