பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
