சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஜனநாயக ஜனதா கட்சியும் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திக்கும் இரு கட்சிகளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியது. தற்போது அரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி […]
