சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி அருகே சிகரமாகானபள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மருத்துவர் லோகேஷ் தலைமையிலான கிருஷ்ணகிரி அவழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு பாறையில் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறையானது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்ததால் கல்வெட்டானது சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் […]
