கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் வடதொரசலூர் ஏரிக்கரை அருகேயுள்ள பிடாரிஅம்மன் கோயில் வளாகத்தில் 800 வருடங்களுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கல்வெட்டு 5அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகும். அத்துடன் அந்த கல்லின் இரு புறமும் எழுத்துக்கள் […]
