முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை முருகன் கோவிலில் ஏற்கனவே முன் மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தங்க கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து நேற்று கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சன்னதி மற்றும் வித்தக விநாயகர் போன்ற சன்னதிகளின் பழமையான […]
