சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் ஐ.நா. அதிகாரியை குறி வைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ஐ.நா. அதிகாரி பயணித்த காரின் மீது மோதி வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 23 பேர் […]
