சோபியான் பகுதியில் பயங்கரவாதிக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் ஷிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மேலும் […]
