காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். […]
