ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி, வெப் தொடர்களில் நடித்தார். இவர் மாடலாகவும் இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் […]
