யாருக்கும் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 72 ஆக உள்ளது. […]
