மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே 1 ராக்கெட் அமைப்பானது வெற்றிகரமாக கடந்த சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இணைந்து ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) போன்றவை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டது. சென்ற 14 நாட்களில் பல தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் […]
