கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]
