மின்கம்பி உரசி தேங்காய் உறிக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள சேர்வைக்காரன்ஊருணி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரது தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல வேலைக்கு சென்ற கோவிந்தன் வேலை முடித்து மதிய உணவு சாப்பிட கம்பெனியின் மாடிக்கு […]
