கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி […]
