புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]
