தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், திமுக அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல். அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை கட்டாயம் வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். […]
