மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]
