அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான் கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? […]
