சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே லாரி மோதி சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அப்துல் ரகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலாவுதீன் ( 8 ) என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் மானாமதுரை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]
