திருநெல்வேலி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள பொட்டல் பகுதியில் வசித்துவந்த அமிர்தராஜ்(56) கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமிர்தராஜ் படப்பகுறிச்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்த அமிர்தராஜ் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
