கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். […]
