திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பேருந்து சேவை திருப்தியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றார்கள். ஆண்டு முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும் பண்டிகை காலங்களில் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். பண்டிகை காலங்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்து போக்குவரத்தையே நம்பி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் கடலூர், நெல்லை, […]
