சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தெற்கு காட்டுவளவு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இறந்தவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல என எம்.செட்டிப்பட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கற்கள் வைத்து அடைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தெற்கு […]
