தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைடுத்து அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அதன்பின் தனது பேரன் காணாமல் போனது […]
