சேலம்-விருத்தாச்சலம் ரயில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த ரெயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பயணிகள் மீண்டும் ரெயில் சேவையை 2 முறை இயக்க வேண்டும் […]
