தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. […]
