சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3.20 லட்சம் ரூபாய் மற்றும் 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறையின் கீழ் சேலம் கிழக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் துணைத்தலைவராக மருத்துவர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கடலூர் மண்டலத்துக்கு துணைத் தலைவராக பணியிட […]
