திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நெல்லை-டவுன் செல்லும் சாலையில் கன்னடியன் கால்வாய் பாலம் உள்ளது. அதன் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் எதிர்புறம் பல ஆண்டுகள் பழமையான மருதமரம் இருந்துள்ளது. இந்நிலையில் தீடிரென நேற்று மரத்தின் கிளை முறிந்து எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆனால் மரம் கிளை முறிந்து விழுந்ததால் சாலையில் போக்குவரத்து […]
