உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி டாக்டர் செய்த தவறினால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற நகரில் பூனம் என்கிற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி அதிக அளவில் ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா பிரசவம் பார்த்துள்ளனர். […]
