சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]
