சென்னையை அடுத்துள்ள மணலியில் டாக்டர் சிவந்திஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமையை நிர்ணயம் செய்ய மற்றும் தேர்தல், ஓட்டுரிமை பற்றி பள்ளி பருவத்திலேயே அவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக “பள்ளி தேர்தல் திருவிழாவானது” நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியையான ஜெகஜோதி முன்னிலை வகித்தார். இதையடுத்து நாடார் உறவின் முறை மூத்த உறுப்பினர் சவுந்திரபாண்டி தேசியகொடி ஏற்றினார். சமத்துவம் மக்கள் கட்சி மாவட்ட […]
