பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 940 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 96 பள்ளிகளில் மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கீழ […]
