மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் குணசீலன் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு சென்ற குணசீலனை பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்து […]
