செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இன்சைட் லேண்டரில் பதிவானதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பினர் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள இன்சைட் லேண்டர் என்னும் தானியங்கி விண்கலத்தை அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதை இந்த இன்சைட் லேண்டர் கண்டறிந்துள்ளது. இந்த நிலமாடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ஆகவும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது இன்சைட் […]
