தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்களை திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதினால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிக பணிக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் […]
