முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் […]
