மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]
