வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக வாட்ஸ்அப்பில் பலருக்கும் தபால் துறை அனுப்புவது போலவே தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரிசு பொருள்கள் மற்றும் மானியம் தபால் துறை வாயிலாக வழங்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறி மோசடி செய்து வருகின்றனர். செல்போனுக்கு குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி அதனை பயன்படுத்துமாறும் கூறுகின்றனர். இவ்வாறு அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை நீங்கள் தொடும்போது […]
